ஒரு பெண்ணிடம் ஆணின்
குணங்கள் கண்டால்
1000-ல் ஒருத்தி
என்கிறார்கள்..
ஏனோ,
ஒரு ஆணாக
அறியப்பட்டவனிடம்
பெண்ணின் குணங்கள்
கண்டால் மட்டும்
10-ல் ஒன்றை கழி
என்கிறார்கள்..
கூட்டிக் கழித்தும்
பார்த்துவிட்டேன்
கணக்கு சரியாக
வரவில்லையே…!
தாயோ தாரமோ வீரம்
கொண்டால்
அதில் பூரிப்பு..
தகப்பனோ தமயனோ
தாய்ப்பாசம் தந்தால்
அதில் பேருவப்பு..
இயற்கையாய் ‘இவர்’கள்
நளினம் கொண்டால்மட்டும்
அதில் அருவருப்பு..
உட்கார்ந்து
யோசித்தாலும்
இப்புதிர் எனக்கு
விளங்கவில்லையே…!
#பெண்ணின் குணங்கள் கண்டால் மட்டும்
ReplyDelete10-ல் ஒன்றை கழி என்கிறார்கள்...# அருமை !
புரியாத புதிரில் இதுவும் ஒன்றுதான். இயற்கை நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வரவில்லை.
ReplyDeleteதங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html
தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html
அருமை !
ReplyDeleteதலைப்பும் அதற்கு விளக்கமாகத் தந்துள்ள பதிவும்
ReplyDeleteமிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ennai migavum kavarnthu vitathu!!!sema!!
ReplyDelete