தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

Sunday, January 29, 2012

வணக்கமுங்க!


             இந்த வலைப்பூ இன்று இங்கு பூப்பதற்கு ஊக்கமெனும் நீரூற்றிய அனைத்து பாசக்கார உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி. வெறும் கண்ணாமூச்சி விளையாட்டிற்காக எழுத ஆரம்பித்தேன். ஆட்டத்தின் முடிவில் நான் கண்டுபிடித்தது, எனக்குள் உறைந்துபோய்க் கிடந்த தமிழ்த் தாகத்தை.
             எழுத வேண்டுமென்ற ஆசை மட்டும்தான். வலைப்பூ தொடங்குவதில் அவ்வளவாக நாட்டமில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமானால் துணிவில்லையென்று தான் கூற வேண்டும். காரணம், நான் எட்டிப்பார்த்த பூந்தோட்டங்களில் பூத்திருந்த வலைப்பூக்கள் பெரும்பான்மையாக எஜமானர்களுக்கு சொந்தமானவையே. ஆகவே, இங்கே எஜமானிக்கள் வெகுக்குறைவுதானென்று நானே முடிவுகட்டி, நமக்கெதுக்கு வீண்வம்பென்று இருந்துவிட்டேன். அப்புறம், இந்த தேன்சிட்டு எப்படி வந்தாளென்று தானே யோசிக்கிறீர்கள். (சரி, சரி நீங்க ஸ்ஸ்ஸபா-ங்குறது எனக்கும் கேட்கிறது. சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்.)
               என் வருடலுக்கெட்டிய முதல் வலைப்பூ மயிலிறகு” தான்.cmayilan.blogspot (இதன்மேல் தட்டுங்கள்,திறக்கப்படும்). இதற்குமுன், மழைக்காகக் கூட நான் கவிதைக்குடைகளுக்குள் ஒதுங்கியதில்லை. மாருத்துவ மேற்படிப்பு நுழைவுத்தேர்வுகளுக்காக புத்தகப்புழுவாகிக் காய்ந்துபோய்க்கிடந்த எனக்கு, மயிலிறகின் படைப்புகள் கம்மஞ்சோலைப்போலத்தான் ஆகிவிட்டது.
             மயிலிறகின் பார்வை மூலம் மற்ற வலைப்பூக்கலையும் ரசிக்கலானேன். படிக்கத் தூண்டியதுடன் நில்லாமல், எழுதும் ஆவலையும் கிளப்பிவிட்டது. இப்படியாக என் கண்ணில் பட்டதுதான் “தெங்காசித் தமிழ்ப் பைங்கிளி” thenkasi thamizh paingiliயின் வலைப்பூ. எஜமானிக்களும் இருக்கிறார்கள் என்ற உண்மை ஒரு பக்கம் உரைக்க, நாமும் ஒரு வலைப்பூ தொடங்கித்தான் பார்ப்போமே என்ற குறுகுறுப்பும் தொற்றிக்கொண்டது. என்னைக் கவர்ந்த இவ்விரு பூக்களும் சிறகாடையில் வலம்வருவதைக்கண்டு, என் மனப்பட்சிக்கும் அவ்வாசை வந்துவிட்டது. நமக்கு எந்தப் பட்சி சரிவருமென்று யோசித்தேன். என் தாத்தா எனக்கு வைத்த செல்லப்பெயரான “தேன்மொழி”யுடன், ஏறக்குறைய என்னைப்போலவேயிருக்கும் சிட்டையும் (ஹி.. ஹி..) சேர்த்து, “தேன்சிட்டு” ஆக்கிவிட்டேன்.
              இதுவே, தேன்சிட்டு தமிழ்த்தேன் பருக ஆரம்பித்ததின் கதைச்சுருக்கம். நான் தமிழ்வெறியை அல்ல, தமிழ்ப்பிரியை மட்டுமே. எனக்குத் தெரிந்த எளியத் தமிழில், இந்த சிட்டின் கண்ணோட்டத்தை பகிர்ந்து கொ(ல்)ள்கிறேன்.
              இப்படி என்னை உசுப்பேத்தி ரணகளத்தில்விட்டு புண்ணியம் (அல்லது பாவமோ, முடிவெடுப்பது உங்கள் பாடு) கட்டிக்கொண்ட அனைவருக்கும் (நான் ஒரு ‘க்’கிற்கு புள்ளிவைப்பதைக்கூட ஆஹா ஓஹோவென்று பாராட்டும் என் பெற்றோரும் சேர்த்தி) வணக்கம் கூறி, என்னுடன் சேர்ந்து தமிழ்த்தேன் பருகிச் சிறகடிக்க வரவேற்கின்றேன்.

17 comments:

  1. வாழ்த்துக்கள்...

    தென் சிட்டு வெற்றியுடன் உலகை வலம் வரட்டும்...

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. yendrum sitttaai paranthida Vaazhthugal..:)

    ReplyDelete
  3. பாசத்துடன் வரவேற்கிறேன் சகோதரி...

    ReplyDelete
  4. நீண்ட நாள் வற்புறுத்தலுக்கு பிறகு வலைப்பூ தொடங்கியிருக்கும் தோழிக்கு வாழ்த்துக்கள்..
    மயிலிறகின் கவிகதைகளை விட தேன்மொழியின் பின்னூட்டங்களுக்கு வாசகர்கள் அதிகம்..
    கையைப் பிடித்து அழைதுவந்துவிட்டேன்..
    இனிமேல் வலைப்பூ நண்பர்கள் மொய்க்க தொடங்கும் தேன்கூடாய் மாறிட வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. இந்த தளத்தில் இருக்கும் மற்ற பதிவுகள் அனைத்தையும் ஏற்கனவே முகநூலில் இரசித்தாயிர்று...
    'அவளால் முடிந்தது' மயிலிறகில் பகிரவும் பட்டுள்ளது..இணைப்பு இதோ மயில் அகவும் நேரம் 01:00 ..

    ReplyDelete
  6. மிக்க நன்றி -கவிதை வீதி... // சௌந்தர் //, ARUVI, koodal bala, “மயிலன்”ஜி..:)

    ReplyDelete
  7. இனிய இரவு வணக்கம் சகோதரி,

    தாங்கள் வலைப் பதிவு எழுத வந்த சம்பவத்தினை,
    வலையுலகினுள் நுழைந்த காரணத்தினை
    அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.
    எஜமானிங்க நிறையப் பேர் இருக்காங்களே! கொஞ்சம் விசிட் அடிச்சுப் பாருங்க. கண்டிப்பாக கண்டு பிடிப்பீங்க.

    ReplyDelete
  8. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது திவ்யா!! நீங்கள் ப்ளாக் ஆரம்பித்தது . உங்கள் திறமையை வீணாக்காமல் மேலும் பல அற்புதமான படைப்புகளை எதிர் பார்கிறேன்!!

    ReplyDelete
  9. கடையை திறந்த முதல் நாளே எட்வின் ஐயா, நிரூபன், பைங்கிளி...
    கலக்கலான ஆரம்பம்டா.. தூள் கெளப்பு...

    ReplyDelete
  10. வணக்கம் சகோதரி வலையுலகத்திற்கு அன்போடு வரவேற்கிறேன்..தொடர்ந்து தேன் சேகரியுங்கள்.ருசிக்க வருகிறேன்.நானும் தளத்தை தொடருகிறேன்..வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. வருகைக்கும் வரவேற்பிற்கும், நன்றி நிரூண்ணே..!

    நாற்று-லயும் நம்ம நட்பை நட்டாச்சு..!

    விசிட் அடிச்சுண்டே இருக்கேன்..!

    ReplyDelete
  12. @ inbarasan

    (உசுப்பேத்திவிட்டவர்களுள் ஒருவரான) இன்பா சார்,

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி..! :)

    திகட்டமல் தேனளிக்க முயற்சிக்கிறேன்..!

    ReplyDelete
  13. @மதுமதி
    கூட்டில் சேர்ந்தமைக்கு நன்றி மதிண்ணா..!

    தூரிகையின் தூரறலிலும் சிறிது நனைந்தூவிட்டாள் சிட்டு..!

    ReplyDelete
  14. @மயிலன்
    முகநூல், மயிலிறகு-னு ஒன்னுவிடாம எல்லாத்துலயும்

    தேன்சிட்ட பறக்கவிட்டுபுட்டு, இப்டி ஒன்னுமே தெரியாத

    மாதிரி, கமுக்கமா வாழ்த்த உங்களால மட்டும்தான்

    முடியும் ஜி..!;)

    ReplyDelete
  15. திவ்யா செல்லத்துக்கு அக்காவின் வணக்கம்..
    எனக்கு தங்கை இல்லையென்று அடிக்கடி வருந்துவதுண்டு..
    ஆனால் என்னைபோலவே ஒரு வலைப்பூவில் ஒரு கவிதாயினி தங்கையைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்...
    என் வலையின் அதிக பக்கங்களையும் வாசித்தது நீங்கள்தான் என்று நினைக்கிறேன்..
    ஆண்கள் என்னைப் பாராட்டுவதை விட பெண்கள் என்னைப் பாராட்டினால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்...
    நன்றி திவ்யா..தேன்சிட்டில் தேன் பெருகி வழிந்து ஆறாக ஓடி அனைவரும் பருகிட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. //திவ்யா செல்லத்துக்கு அக்காவின் வணக்கம்..//

    :):):):)

    //கவிதாயினி தங்கை//

    இன்னும் முளைக்கவே இல்லையே..! ;)

    //என் வலையின் அதிக பக்கங்களையும் வாசித்தது நீங்கள்தான் என்று நினைக்கிறேன்..//

    அனைத்தையும் வாசித்தாயிற்று:):)

    //ஆண்கள் என்னைப் பாராட்டுவதை விட பெண்கள் என்னைப் பாராட்டினால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்...//

    ஒத்த சிந்தனையக்கா, நம்மிருவருக்கும்..
    நன்றி..:)

    ReplyDelete
  17. //சரியாகச் சொல்ல வேண்டுமானால் துணிவில்லையென்று தான் கூற வேண்டும்//
    என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.காரணம் நான்
    //அவரெனக்கு
    அரணாய் அமைந்துவிட்டதினால்
    அசாத்தியங்களும் அஸ்தமனங்களும்கூட
    என்னை அண்டுவதற்கு அஞ்சி நிற்கின்றன//
    வரிகளை தாங்கிய "என்ன தவம் செய்தேன்" வாசித்து விட்டு அதன் மூலம் தான் "வணக்கமுங்க" வாசிக்க வந்தேன்.

    ReplyDelete

நில்லுங்க.. சொல்லுங்க.. செல்லுங்க.. (நன்றிங்க!!!)