வானத்து நிலாவென்றது
தொலைவில் வைத்து
ரசிக்கத்தானா..
சிற்பிக்குள்
முத்தென்றது
பூட்டி வைத்து
பூஜிக்கத்தானா..
கல் சிற்பமென்றது
உனதாசைக்கேற்ப எனை
செதுக்கத்தானா..
அழகோவியம் என்றது
உன் தீண்டலில் சிவந்த
தேகத்தை தானா..
காதலித்தேன் என்றது
நானென்று நீ நினைத்துக்கொண்ட
உன் கற்பனையைத்தானா..!
அப்டித்தான் என்று நானும் எண்ணுகிறேன்.
ReplyDelete