தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

Wednesday, January 25, 2012

அது இது எது


ஆசைக்கு தாத்தா பாட்டி
வச்ச பேரு..

இராசிக்கு ஆத்தா அப்பன்
வச்ச பேரு..

சேட்டைக்கு உடன்பிறப்புகள்
வச்ச பேரு..

கேலிக்கு நண்பர்கள்
வச்ச பேரு..

இங்கிதம் கருதி அக்கம் பக்கத்துல
வச்ச பேரு..

இதெல்லாம் பத்தாதென்று
அவன் பேர துணைப்பெயராக சேர்த்துக்க
இதுக்கு ஆசைய பாரு..

ஒரு வேள,
இதுக்கு பேரு தான் அதுவோ..!!!

1 comment:

  1. நம்மைப் பிடிக்காதவர்கள் நமக்கு வைக்கும் பேர்தான் அது இது

    ReplyDelete

நில்லுங்க.. சொல்லுங்க.. செல்லுங்க.. (நன்றிங்க!!!)