தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

Wednesday, January 25, 2012

எனக்கும் சற்று நேரம் ஒதுக்கு

என் இதழோர மச்சம்
கண்டு ரசித்தாய்..
கன்னக் குழியில்
சறுக்கி விளையாடினாய்..
அலைக் கூந்தலில்
நீந்தி மகிழ்ந்தாய்..
அன்பின் கதகதப்பில்
கரைந்து உருகினாய்..
இதற்கே உனக்கு நேரம்
சரியாக இருக்க,
கவனிக்கத் தோன்றவில்லை போலும்
எனக்குள் நித்தமும் மறுகிக் கொண்டிருக்கும்
“சராசரி” என்னை..!!!

10 comments:

 1. //இதற்கே உனக்கு நேரம்
  சரியாக இருக்க,
  கவனிக்கத் தோன்றவில்லை போலும்
  எனக்குள் நித்தமும் மறுகிக் கொண்டிருக்கும்
  “சராசரி” என்னை..!!!//ஏனோ ?அருமை அன்பரே

  ReplyDelete
 2. அவருக்கு உங்ககிட்ட
  விளையாடவே நேரம் சரியா இருக்கு...
  அப்புறம் எங்க உங்களை கவனிக்க..

  ReplyDelete
 3. உண்மை தான்..! தாங்கள் வந்து சேர்ந்தது மிக்க மகிழ்ச்சி..:)

  ReplyDelete
 4. இது இது இது கவிதை

  ReplyDelete
 5. தள வடிவமைப்பு நன்றாக உள்ளது.
  கவிதையும்...

  ReplyDelete
 6. பிடித்துள்ளது. நல்ல கவிதை. நன்று நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete

நில்லுங்க.. சொல்லுங்க.. செல்லுங்க.. (நன்றிங்க!!!)