மறையவில்லை இன்னும்
அவன் அறைந்த கையின்
ரேகைகள்..
உலரவில்லை இன்னும்
இவள் கன்னத்தில்
கண்ணீர்க் கோடுகள்..
வெளிவரவில்லை இன்னும்
அவன் இவள் கருவில்
விட்டுச்சென்ற
எட்டு மாத இரட்டை
சிசுக்கள்..
அதற்குள்,
பறித்தாகிவிட்டது
இவளது பூவையும்
பொட்டையும்..
உடைத்தாகிவிட்டது
கைகளில் சிணுங்கும்
வளையல்களை..
கொடுத்தாகிவிட்டது
விதவை எனும் பட்டத்தை..
அன்றுதான் போய்ச்
சேர்ந்துவிட்டிருந்த
குடிகாரக் கணவனின்
ஞாபகமாக
இச்சமுதாயம் அவளுக்குத்
தரும்
நினைவுப் பரிசு..!!!
இந்நிலை இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று நினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது..கவிதை அருமை..தொடருங்கள்..
ReplyDeleteசமுதாயச் சிந்தனை..சிந்திக்க வைக்கும்.
ReplyDeleteதோழர் மதுமதியின் வலைச்சர அறிமுகத்தால் இங்கு வந்தேன்.
ReplyDeleteஅழகுற பல சரங்கள் தொடுக்கப்பட்டுள்ளதை கண்டேன்.
அத்தனை படைப்புகளையும் ரசித்தேன் சகோதரி.
ஆம். மதுமதியின் வலைச்சர அறிமுகம் கண்டு வந்துதான் நானும் ஒரு புதிய நல்முத்தைக் கண்டுபிடித்திருக்கிறேன். அழகிய பல முத்துக்களை இங்கு கண்டேன், அகமகிழ்வு கொண்டேன். நல்ல படைப்புகளை வழங்கும் உங்களுக்கு என் வாழ்த்தும், அறிமுகம் செய்த கவிஞர் மதுமதிக்கு என் நன்றியும்.
ReplyDeleteஇறந்தும் கெடுத்தான் இந்தக் குடிகாரன். பரிதாபத்துக்குரிய பெண்ணின் நிலையை எடுத்துக்காட்டும் நிதர்சன வரிகள். வலைச்சர அறிமுகத்துக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteசோகமான கவிதை அருமை வாழ்த்துகள்
ReplyDeleteஅழகான உணர்வுகள் கவிதையில் . வாழ்த்துக்கள்
ReplyDeleteசமுதாய பக்கங்களின் சுருக்கம் விழுந்த நிலையினை எடுத்து கூறிய விதம் மிகச்சிறப்பு .. வாழ்த்துக்கள்
ReplyDeleteமதியண்ணனின் அறிமுகம் கண்டு, சுவைக்க வந்த அனைத்து தோழர்களுக்கும், தோழிகளுக்கும் நன்றி்!:):)
ReplyDeleteவேதனையான கவிதை.
ReplyDeleteஅன்பு நண்பர் சங்கவி (sangkavi.com) மூலம் உங்கள் தளத்திற்கு வந்தேன். உங்களின் கவிதை மனதை நெகிழ வைத்தது ! பாராட்டுக்கள் ! நன்றி சகோதரி !
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே..:)
Deleteநல்ல படைப்புகளை வழங்கும் உங்களுக்கு என் வாழ்த்தும், அறிமுகம் செய்த கவிஞர் மதுமதிக்கு என் நன்றியும்.
ReplyDelete