உன் நினைவுகளின்
திடீர் ஆக்கிரமிப்பின்
விளைவு..
எனது ‘அச்சம் மடம்
நாணம்’ அனைத்தும்
முறுக்கிக்கொண்டு
வெளிநடப்பு செய்துவிட்டன..
எஞ்சியிருந்த நம்பிக்கை
ஒன்றும்
உன் அலட்சியப்
புன்னகையால்
இன்று அவசர சிகிச்சை
பிரிவில்..
நியாயம் கேட்க
உன் மனம் தேடி வந்தால்,
என்னைத் துறந்த ‘அவற்றை’
கேட்கின்றாய்,
நுழைவுக்கட்டணமாய்…!
மருத்துவர்தான்னு காட்டிட்டீங்க.. அருமை
ReplyDelete