தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

Tuesday, January 24, 2012

அவளால் முடிந்தது


பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி

ஆனாலும்,
இவள் ஆறுதல் தேடியதில்லை
மதுவிலோ போதையிலோ..

இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை
மாப்ள-மச்சான் நண்பர்களிடத்தில்...

இவள் சோகத்தை மறந்ததில்லை
கானா மெட்டுக்கள் பாடி..

இவள் பழி சுமத்தியதில்லை
ஒட்டுமொத்த ஆண்கள் வர்க்கமே மோசமென்று..

இவள் கவனிக்கத் தவறியதில்லை
கேட்கக் கூசும் விமர்சனங்களை..


இவளுக்கு தெரிந்தது, முடிந்தது,
அனுமதிக்கப்பட்டது
எல்லாம் வெறும்
“தலையணை நனைத்தல்” மட்டுமே...!!!

5 comments:

 1. அருமையாக வருகிறது திவ்யா.
  தலையணை நனைத்தல் த்aaண்டி வார்ங்கள்

  ReplyDelete
 2. தலையனை நனைத்தல் தாண்டி வாருங்கள்

  ReplyDelete
 3. இப்போது பெண்கள் அழுவதை நிறுத்திவிட்டார்கள் திவ்யா...தலையணை நனைய வேண்டாம்
  தலைக்கனம் பிடித்தவர்களை நம் அன்பில் நனைய வைப்போம்..ஆனாலும் உண்மைதான்..
  மறுக்கமுடியவில்லை..இன்னும் சில பெண்கள் அழுது கொண்டுதான் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 4. வலைச்சரத்தில் இன்று இந்த பதிவு. நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள். தங்களின் கருத்தினையும் தமிழ்மண வாக்கினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_17.html

  ReplyDelete
 5. ''...இவளுக்கு தெரிந்தது, முடிந்தது,

  அனுமதிக்கப்பட்டது
  எல்லாம் வெறும்
  “தலையணை நனைத்தல்” மட்டுமே...!!!
  மனசுக்குள்ளேயே போட்டு அமுக்கும் ஜாதி தான் பெண்கள் பலர்.
  நல்ல சிந்தனை வரிகள்.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete

நில்லுங்க.. சொல்லுங்க.. செல்லுங்க.. (நன்றிங்க!!!)