தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்
தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்
Tuesday, February 14, 2012
Friday, February 10, 2012
பாரபட்சம்
ஏன் இந்த பாரபட்சம்..
நாம் செய்த தவறு – விதி
பிறர் செய்த பிழை – சதி?
உடல்நலக் குறைவு –
அரவணைப்பு
மனநலக் குறைவு –
நிராகரிப்பு?
செயற்கை மார்பகங்கள் –
பிரமாதம்
செயற்கை கால்கள் – ஐயோ
பாவம்?
ஜாதகம் சேராமல்
இரத்தாகும் சம்பந்தம் – கெளரவம்
மனம் ஒப்பாமல் பிரியும்
பந்தங்கள் – அநாகரிகம்?
அதிகம் படித்த
மாப்பிள்ளை – extra மதிப்பு
அதிகம் படித்த மணப்பெண் – extra
வசூலிப்பு?
நீ ஈன்றெடுத்த
பிள்ளையின் குறும்புகள் – வரம்
உன்னை ஈன்றோரின்
இரண்டாம்
குழந்தைப்பருவம் – பாரம்?
Thursday, February 2, 2012
Subscribe to:
Posts (Atom)