நான் என்றோ மனதிற்குள்
பல்லாங்குழியாட
ஆசைப்பட்டது,
இப்பொழுதுதானா
இந்த “பொறுப்பு
பொன்னுசாமிகளின்”
காதுகளில் விழுந்து
வைக்கணும்…
இப்படி என்னைத் திகட்ட
திகட்ட
பல்லாங்குழி ஆட
வைத்துவிட்டார்களே,
இவர்களின் வாக்கு
தவறாமைக்கு எடுத்துக்காட்டான
எங்கள் ஊர் சாலைகளில்..!!
எப்படியோ உங்க ஒருத்தர் ஆசையையாவது “பொறுப்பு பொன்னுசாமிகள் நிறைவேற்றி விட்டார்களே அதுவரைக்கும் சந்தோஷம்
ReplyDeleteஆமாம்மா..! கூடவே, உடம்பு வலியையும் இலவச இணைப்பா கொடுத்துட்டாங்களே..! இவங்களுக்கு தான் இலவசமா கொடுக்கிறதுன்னா, அல்வா கொடுக்கற மாதிரியாச்சே..! வருகைக்கும் கருத்துக்கும் நன்றியக்கா..!:)
Deleteசாலைகள் பல்லாங்குழி எனப் பார்த்த உங்களின் கண்ணோட்டம் ரசிக்கவும் வியக்கவும் வைத்தது. நன்று.
ReplyDeleteஅத்துடன் நிறுத்திக்கொண்டேனே என்று சந்தோஷப்படுங்க..! எனக்கு இருந்த கோபத்தில், வாய்க்கு வந்தபடி திட்டவிருந்தேன்..!:)
Deleteஉங்கள் பார்வையில் சாலைகள் கவிதை நச்....
ReplyDeleteவியாழன் தோறும் வெளியாகும் எனது அஞ்சறைப்பெட்டியில் இந்த வாராட் உங்களை அறிமுகப்படுத்தி உள்ளேன்...
ReplyDeleteவந்து, சேர்ந்து, சுவைத்து, பிறருக்கும் பகிர்ந்து கொடுத்தமைக்கு மிக்க நன்றி தோழரே..:)
Deleteசங்கவியிலும் சிறிதுநேரம் வட்டமிட்டேன்.. (தற்போது நேரமில்லாததால், அவ்வளவே முடிந்தது..) இரசிக்கத் தூண்டிய பதிவுகள். விரைவில், முழுதும் சுவைக்க வருகிறேன்..!
வண்டியுடன் பல்லாங்குழி விளையாட உங்களுக்கும் இது ஒரு வாய்ப்புதானே. நல்ல கற்பனை.
ReplyDeleteநீங்க வேற..! வண்டி இப்போ விளையாடிக்கொண்டிருப்பது, சர்விஸ் சென்டரில்..!
Deleteபல்லம் மேடுகளை சீரான எழுத்துகளால் சாடியவிதம் சூப்பர்
ReplyDeleteநன்றி..! :)
Deleteதங்கையே இந்தப் பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்த்துவிட்டுச் செல்லவும் நேரமிருந்தால்
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/02/blog-post_28.html