ஏன் இந்த பாரபட்சம்..
நாம் செய்த தவறு – விதி
பிறர் செய்த பிழை – சதி?
உடல்நலக் குறைவு –
அரவணைப்பு
மனநலக் குறைவு –
நிராகரிப்பு?
செயற்கை மார்பகங்கள் –
பிரமாதம்
செயற்கை கால்கள் – ஐயோ
பாவம்?
ஜாதகம் சேராமல்
இரத்தாகும் சம்பந்தம் – கெளரவம்
மனம் ஒப்பாமல் பிரியும்
பந்தங்கள் – அநாகரிகம்?
அதிகம் படித்த
மாப்பிள்ளை – extra மதிப்பு
அதிகம் படித்த மணப்பெண் – extra
வசூலிப்பு?
நீ ஈன்றெடுத்த
பிள்ளையின் குறும்புகள் – வரம்
உன்னை ஈன்றோரின்
இரண்டாம்
குழந்தைப்பருவம் – பாரம்?
அழகான கவிதை வாழ்த்துகள்
ReplyDelete:)
Deleteகவிதையின் வரிகள்
ReplyDeleteதீ மூட்டுகிறது மனசில்.
நீர் வழிக்கிறது கண்களில்.
தீபிகா.
நன்றி தோழி..!:)
Deleteஅழகை எழுதுகிறாய். பயமாக இருக்கிறது. அழகான எழுத்துக்களில் தொலைந்து போவதை வாடிக்கையாக கொண்டவன் நான். நானும் ஒரு வலை பூ வின் சொந்தக்காரன் தான். எஜமானன் அல்ல. சுமாராக எழுத தெரியும். நேரம் கிடைத்தால் நுழைந்து பார்க்கவும்.
ReplyDeletehttp://loveableblacky.blogspot.in/
http://moovjabi.blogspot.in/
கருத்திற்கும் அழைப்பிற்கும் நன்றி..! :)
Deleteஅருமையான பதிவு!
ReplyDelete:)
Delete